சோர்வு, ரத்த அழுத்தம் நீங்க அருமையான செம்பருத்தி தேநீர்!! குட்டீஸ்க்கு ரொம்ப நல்லது!!

0
82

செம்பருத்தி மலரானது மிகவும் அற்புதமான ஒன்றாகும். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. மேலும், நமது ஊர்களில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மலராகவும் இது இருக்கின்றது. அற்புதமான செம்பருத்தி மலரை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் உள்ள சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும்.

செம்பருத்தி மலர்களை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். மேலும் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வது தடுக்கின்றது இதனுடைய காய்ந்த இதழ்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். செம்பருத்தி உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லதாகும்.

மேலும், சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒரு முக்கிய பொருளாக இது விளங்குகிறது. மேலும் செம்பருத்தி சர்பத்தும் ருசியாக இருக்கும். செம்பருத்தியில் டீ எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

செம்பருத்தி தேனீர் தயாரிப்பது எப்படி?

முதலில் நான்கு செம்பருத்தி இலைகளை எடுத்து அதனை தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, அது சூடாக மாறியதும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். பின் சிறிதளவு இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கீழே இறக்கவும். அதன் பிறகு அவற்றை ஒரு வடிகட்டியில் வடிகட்டி அருந்தவும்.

முக்கியமான குறிப்பு:

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். ஒரு நாளுக்கு 2 கப் மட்டுமே அருந்த வேண்டும். அப்போது ரத்த அழுத்தம் சீராக இருக்கும். மேலும் சோர்வு நீங்கும்.

author avatar
Jayachithra