மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்
கொரோனா காரணத்தினால் போன வருடம் இம்மாதத்தில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.
கொரோனா தொற்று சிறிதளவு குறைந்து வரும் நிலையில் மீண்டும் தனது ருத்ரதாண்டவத்தை எடுக்கிறது.சீனாவின் பிறப்பிடமாக இருந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து பல நாடுகளுக்கு விருந்தாளி போல் வந்து 24.03 கோடி நபர்களின் உயிர்களை எடுத்து சென்றது.இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர் எண்ணிக்க 8.10 கோடியாக உள்ளது.அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்அமெரிக்கா நாடு மட்டும் முதலில் இடத்தை பெற்றுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பானது இன்றைய கணக்கீட்டின் படி 28,193,578 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பால் ஓர் நாளில் 13,308 பேருக்கு தொற்று பரவியுள்ளது.கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 495,989 ஆக அதிகரித்துள்ளது.இங்கிலாந்தில் 13,308 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது.
மேலும் கொரோனா தொற்றால் இங்கிலாந்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலில் மீண்டும் 45,561 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதையடுத்து 1,046 கொரோனா பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர்.ரஷ்யா நாட்டில் புதிதாக கொரோனா தொற்று 14,861 பேருக்கு பாதித்துள்ளது.ரஷ்யாவில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.
மக்கள் ஒரு பக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் கொரோனா பாதிப்பு மறுபக்கம் ருத்ரதாண்டவம் எடுக்க ஆரம்பிக்கிறது என்பது மீண்டும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.