பேயாக மாறும் கொரோனா! அச்சுறுத்தும் கதையுடன் விரைவில் படப்பிடிப்பு!

Photo of author

By Parthipan K

கொரோனாவை மையப்படுத்தி தமிழில் படம் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பெல்லாம் கிராமப்பகுதிகளில் அல்லது தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் ஊர் பெரியவர்கள் குழந்தைகள் தொலைதூரம் சென்று விளையாட சென்று வம்புகளை இழுத்து வரக்கூடாது என்பதற்காக குளத்தின் அருகிலும், வேப்ப மரத்தின் கீழும் பேய்கள் இருக்கும் என்று கதைகள் மூலமாக அச்சுறுத்தி ஒருவர் இரவு நேரங்களில் அப்பகுதி வழியாக வண்டியிலையோ அல்லது நடந்தோ செல்லும் போதோ மோகினி வழிமறித்து வெத்தலைக்கு சுண்ணாம்பு தா என்று கேட்கும் என்று அச்சுறுத்தி வந்தனர்.

இவர்களது அச்சம் 18 வயது தாண்டும் வரை இருக்கத் தான் செய்யும். அதன் பின்புதான் ஓரளவுக்கு அறிவு பெற்று ஒரு வித மன தைரியத்துடன் சுற்ற தொடங்குவார்கள். தற்போது கொரோனாவும் அப்படித்தான் ஆகிவிட்டது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் இருக்கிறதோ இல்லையோ அதன் மூலம் அடிக்கடி வெளியிடப்படும் தகவல்களும் , செய்திகளும் மக்களை பயமுறுத்திக் கொண்டே வருகின்றன.

தற்போது அதிக அளவில் மக்களால் பார்க்கப்படும் செய்தியாக கொரோனா செய்தி விளங்குவதால் அதை பயன்படுத்தி தமிழ் சினிமா திரையுலகில் கதை ஒன்று ரெடியாகி உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த கதை ஒரு திகில் கதை என்று கூறிய அதே சமயத்தில், கொரோனா வைரஸை பேயுடன் ஒப்பிட்டு ஒரு புதுவிதமான கதையை வடிவம் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கப்போவது யார் ? தயாரிக்கப்போவது யார் ? இதில் நடிக்க போகிறவர்கள் யார் ? என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.