சீனா மறைத்த உண்மையால் நேர்ந்த விபரீதம்! உலக நாடுகள் அதிருப்தி!

0
82

சீனா கொரோனா குறித்து மறைத்த உண்மைகளை ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளிகொண்டு வந்துள்ளது.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் பரவ தொடங்கியதாக அந்நாடு தெரிவித்தது. ஆனால் இது பொய் என்று கூறி அமெரிக்கா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இதற்கான சரியான பதிலையும் சீன அரசு தற்போது வரை அறிவிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூட கொரோனா குறித்த விரிவான விவரங்களை அவர்கள் அளிக்கவில்லை. டிசம்பர் மாதம் முதல் தொடங்க வில்லை அதற்கு முன்பிருந்தே இந்த பாதிப்பு உள்ளதாகவும் உலக நாடுகளிடம் இருந்து சீனா மறைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், உலகத்தின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் சீனாவின் வரைபடத்தை செயற்கைக்கோள் படத்தின் மூலம் கண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு வந்துள்ளனர். அதில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை செயற்கை கோள் புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் விளக்கியுள்ளனர். அதில் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் இருக்கக் கூடிய மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையில் அதிக அளவில் கார்கள் வந்து சென்றதாக காட்டப்பட்டுள்ளதால், தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்ததால் தான் மருத்துவமனைக்கு மக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டுள்ளது.

எனவே கொரோனா பாதிப்பு என்பது ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்டு டிசம்பர் வரை அதிகரித்துக் காணப்பட்ட பின்பே இதனை இனி மூடி மறைக்க முடியாது என சீன அரசு உலக மக்களிடையே தெரிவித்துள்ளது. தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட இந்த ஆதாரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் சூழ்நிலையில், உலக அளவில் பரவி இத்தனை பாதிப்பை ஏற்படுத்த  ஒரே காரணம் சீனா மறைத்த இந்த உண்மை தான் என்று சீன நாட்டிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

author avatar
Parthipan K