இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 30,44,941 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 912 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 56,706 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை 22,80,567 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,01,147 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுவரை 3,52,92,220 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.