86 லட்சத்தை கடந்த பாதிப்பு: 1.27 லட்சத்தை கடந்த உயிரிழப்பு!

0
159

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 44,281 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,36,012 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 521 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,27,571 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,326 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 80,13,783 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 92.79 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 4,94,657 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 11,53,294 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 12,07,69,151 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous article8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும்..! மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்!
Next articleஅவரு கேள்வி கேட்டால் அங்க நிச்சயமாக நாங்கள் ஜெயிப்போம்! காங்கிரசை கலாய்த்த பாஜகவின் முக்கிய புள்ளி!