அதிகரித்து வரும் பாதிப்பு: இன்றைய நிலவரம்!

0
116

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 44,376 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,22,217 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 481 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,34,699 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37,816 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 86,42,771 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 93.72 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 4,44,746 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 11,59,032 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 13,48,82,699 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்!
Next articleபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுசித்ரா இதனால்தான் வெளியேறினாரா? வெளியான தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!