மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா நிலவரம்!

0
131

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 50,210 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,64,086 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,24,315 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 53,331 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 77,11,809 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 92.20 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 5,27,962 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 11,09,425 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 11,42,08,384 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleவிருதாச்சலம் கிளை சிறையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்! போலீசார் விசாரணை!
Next articleகடிதம் எழுதிய எம்பி! அதிர்ச்சிக்குள்ளான குடியரசுத் தலைவர்!