கொரோனா பாதிப்பால் 22 வயது இளைஞர் மரணம்! பயத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

Photo of author

By Jayachandiran

கொரோனா பாதிப்பால் 22 வயது இளைஞர் மரணம்! பயத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

Jayachandiran

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்கிற இளைஞர், திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 ஆம் தேதி சொந்த ஊரான திண்டுக்கல் சென்று வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இளம் வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கும் அதில் பணிபுரியும் நர்ஸ் உதவியாளர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.