ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்! பிறகு மருத்துவருக்கு கிடைத்த அதிர்ச்சி ரிப்போட்?

Photo of author

By Jayachandiran

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் மருத்துவர்களையும் சுகாதாரத்துறையையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவின் வூகாண் மாகாணத்தில் உருவான கொரோனா தொற்று உலக நாடுகளுக்கு பரவி பலாயிரம் உயிர்களை பலி வாங்கியதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீவிரமாக பரவி வருகிறது. மெக்சிகோ நாட்டில் ஒரு பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தது. இதனால் தாயும் தந்தையும் மிகந்த மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த மகிழ்ச்சியானது வெகு நேரம் நீடிக்கவில்லை. பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

உலகளவில் இதுவரை இப்படி எங்கும் நடந்ததில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்த ஒரே நாளில் தொற்று ஏற்பட்டதில்லை. கொரோனா பாதித்த யாராவது குழந்தையை தொட்டால் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த மூன்று குழந்தைகளை யாரும் நெருங்கவில்லை. கடந்த 17 ஆம் தேதி இரண்டு ஆண் குழந்தை 1 பெண் குழந்தையில் இரு குழந்தைகள் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. பிறந்த முதல்நாளே பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட செய்தி பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.