சென்னையில் இன்று மட்டும் 24 பேர் மரணம்! கொரோனாவின் கோரதாண்டவம் எப்போது முடியும்?

Photo of author

By Jayachandiran

சென்னையில் இன்று மட்டும் 24 பேர் மரணம்! கொரோனாவின் கோரதாண்டவம் எப்போது முடியும்?

Jayachandiran

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தினசரி கொரோனா தொற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பெருகி வருகின்றன. பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று இன்று மட்டும் இதுவரை உயிரிழந்தோர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 9 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேர் உட்பட இதுவரை இன்று மட்டும் 24 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவி வருவதை தடுக்க மக்கள் தொடர்ந்து வீட்டில் முடங்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.