உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவால் தர முடியும்! பில்கேட்ஸ் பேச்சு

Photo of author

By Jayachandiran

உலகளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் ஆன்லைன் மூலம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் முக்கியமானவை பல கண்டுபிடித்துள்ளனர். இந்திய மருந்தியல் துறை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கத் தேவையான முயற்சிகளையும், உதவிகளையும் சிறப்பாக செய்து வருகிறது.

 

மேலும் இந்தியாவில் பல்வேறு நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவால் தங்கள் நாட்டுக்கு மட்டுமின்றி உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இது ஆகஸ்ட் 15 ஆம் தேதி மருத்துவ பயன்பாட்டிற்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

 

இதுவரை இந்தியாவில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24,936 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா தடுப்புக்கான மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.