நான் கற்பழித்த பெண்ணை நானே திருமணம் செய்து கொள்கிறேன்! பாதிரியார் பகீர் மனு.!!

0
202

கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள கொட்டியூர் செயிண்ட் செபாஸ்டின் சர்ச் பாதிரியாராக ராபின் என்பவர் இருந்து வருகிறார். இந்த கிறித்தவ ஆலயத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 மாணவியை ராபின் கொடூரமாக கற்பழித்தார். இதன் காரணமாக அப்பெண் கருவுற்று ஒரு குழந்தை பெற்றார்.

 

மாணவியின் தந்தைதான் கர்ப்பத்திற்கு காரணம் என்று புரளி பேசி ராபின் தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து காமக் கொடூரன் ராபினை காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

 

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் நான் பலாத்காரம் செய்த மாணவியை நானே திருமணம் செய்து கொள்கிறேன், இதற்கான எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு குறித்து நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

Previous articleஉலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவால் தர முடியும்! பில்கேட்ஸ் பேச்சு
Next articleதிருக்குறள் பற்றி மோடி மாஸ் ட்விட்.! உலகமறை போற்றும் உண்மை வழிகள்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here