கொரோனா பாதிப்பில் விஜய் ரசிகர்களின் மாஸ்டர் பிளான்! 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி..!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வேலையில்லாமல் வறுமையில் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் தாராள நிதிவேண்டி வேண்டுகோள் வைத்தார். இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் நிதி அளிக்கத் தொடங்கின. சினிமா திரைப்பட நடிகர், நடிகை போன்றவர்களும் கோடிக்கணக்கில் நிவாரண நிதியை அளித்துள்ளனர். மேலும் சிறுவர் முதல் பெரியவர் வரை மக்கள் மூலமாக நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் வடசென்னையில் கொரோனா பாதிப்பால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு 1,000 பால் பாக்கெட் கொடுத்து உதவியுள்ளனர். இதேபோல் தேனி மாவட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகளை வழங்கியுள்ளனர். நடிகர்கள் பெயரில் சினிமா தியேட்டரில் விசில் அடிப்பதோடு இல்லாமல் ஆபத்தான சூழலில் மக்களுக்கு உதவிய விஜய் ரசிகர்களுக்கு மக்கள் சார்பிலும் சமூக வலைதளங்களின் சார்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதற்கு முன்பு கொரோனா நிவாரண உதவியாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் 150 அரிசி மூட்டைகள் மக்களுக்கு வழங்கியதும், தொடர்ந்து அவசரகாலத்தில் உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது.