அர்னால்ட் அளித்த 7.5 கோடி நிதியுதவி! மருத்துவர்களே நிஜ ஹீரோக்கள் என்று புகழாரம்.!!

0
126

அர்னால்ட் அளித்த 7.5 கோடி நிதியுதவி! மருத்துவர்களே நிஜ ஹீரோக்கள் என்று புகழாரம்.!!

ஆலிவுட் நடிகர் அர்னால்ட் கொரோனா பாதிப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்காக 7.5 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

உலக நாடுகளில் பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அமெரிக்காவில் அதிகளவு பாதிப்பை கொரோனா ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 2.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 5 ஆயிரத்தை தாண்டியது.

சீனா, இத்தாலி , பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க அதிபரும் கொரோனா தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை எதிர்த்து பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கு உதவும் வகையில், பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்ட் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில்
7.5 கோடி மதிப்பாகும். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிஜ ஹீரோக்களுக்கு எனது பங்களிப்பு என்று கூறினார்.

Previous articleஇந்தியாவை பின்பற்றும் சிங்கப்பூர்! உலக அளவில் பெருமிதம்
Next articleசிகிச்சையின் போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசின் புதிய முயற்சி