ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை! போலீசார் மீது கல்வீச்சு! லேசான தடியடி! தென்காசியில் நடந்த பரபரப்பு சம்பவம்!

0
194

ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை! போலீசார் மீது கல்வீச்சு! லேசான தடியடி! தென்காசியில் நடந்த பரபரப்பு சம்பவம்!

ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை நடத்த குழுமியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் தென்காசியில் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் பரவலை தடுக்க அரசு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. உத்தரவை மீறி தென்காசி பள்ளிவாசலில் தொழுகை நடத்த கூட்டமாக திரண்ட இஸ்லாமியர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். அவர்கள் மறுக்கவே லேசான தடியடி நடத்தப்பட்டது. இதனால் போலீசார் மீது கல்வீச்சும் செருப்பு வீச்சும் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனோ பரவலை தடுக்கும் நோக்கத்தில் மக்கள் கூடும் அத்தியாவசியமற்ற அனைத்து இடங்களுக்கும் தடை உள்ளது. இதில் வழிபாட்டு தளங்களும் அடங்கும். இந்நிலையில் தென்காசி பள்ளிவாசல் இஸ்லாமியர்களிடம் அவரவர் வீட்டில் தொழுகை நடத்துமாறு காவல்துறையினர் கூறிய பின்பும் நேற்று, வெள்ளிக்கிழமை தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் ஊரடங்கு உத்தரவை மீறி 100 க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

தென்காசி டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன் தலைமையிலன போலீசார் அங்கு சென்று ஜமாத் நிர்வாகிகளிடம் பேசி வீட்டுக்கு செல்லுமாறு கூறப்பட்டது. இதனை ஏற்காமல் அங்கேயே இருந்துள்ளனர். மீண்டும் கோரிக்கையாக போலீசார் கூறியும் யாரும் அங்கிருந்து நகரவில்லை. இதனையடுத்து வலுக்கட்டாயமாக அவர்கள் மீது லேசான தடியடி நடத்த ஆரம்பித்ததால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பள்ளிவாசலில் இருந்த சிலர் போலீசார் மீது கல்வீச்சும், செருப்பும் வீச்சும் நடத்தியதாக கூறப்படுகிறது. காவல்துறையின் நடவடிக்கைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

Previous articleதப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் பரிசோதனை செய்ய வந்த டாக்டர்களை கல்லால் அடித்து வெறிச்செயல்!
Next articleதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!