1.25 கோடி நிதியுதவி அளித்த தல அஜித்.! சமூக அக்கறையில் சினிமா நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு.!!
கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் 1.25 கோடி வழங்கியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு கண்காணிப்பு, சமூக இடைவெளி, வீட்டில் தனித்திருப்பது போன்ற பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா நிவாரண நிதி அளிக்குமாறு மக்களிடம் எடப்பாடி கோரிக்கை வைத்தார். நாம் ஒற்றுமையோடு எதிர்த்து போராடினால்தான் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறியிருந்தார். இதன் பின்னர் தனியார் நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலர் முதல்வரின் கொரோனா நிவாரண தடுப்புக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் யாருடைய பிண்ணணியும் இல்லாமல் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிய, ரசிகர்களால் “தல’ என்று கூறப்படும் நடிகர் அஜித்குமார் கொரோனா நிவாரண நிதியாக 1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதில் 50 லட்சம் பிரதமரின் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் தமிழக நிவாரண நிதிக்கும், 25 லட்சம் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு இல்லாமல் வேலையிழந்து காணப்படும் பெஃப்சி நிறுவன ஊழியர்களுக்கு உதவும் வகையிலும் நிதியை வழங்கியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் மட்டுமல்லாது பலர் நடிகர் அஜித்குமாரை பாராட்டி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு டுவிட்டரில் அஜித்தை பற்றி விமர்சித்த நடிகை கஸ்தூரி தல ரசிகர்களுடன் கடுமையான விமர்சன விவாதத்தை முன்வைத்திருந்தார். தற்பொது பழைய மனக்கசப்பை மறந்து அஜித்தை பாராட்டி கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.