கொரோனா நிவாரண நிதியாக 6 லட்சம் வழங்கிய பிரபல நடிகை!
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சினிமா திரைப்பட ஷூட்டிங் வேலைகளும் முற்றிலும் முடங்கி இருப்பதால் பெஃப்சி நிறுவன ஊழியர்கள் பலரும் தவித்து வருகின்றனர். தமிழக சினிமா ஊழியர்களுக்கு மட்டும் கோரிக்கையின் சார்பில் நடிகர்கள் அரிசி மூட்டைகள் மற்றும் நிதியுதவி அளித்து வந்தனர். இந்த இக்கட்டான சூழலில், நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் வழங்கியதோடு, பல்வேறு முண்ணனி நடிகைகளும் எவ்வித உதவியும் செய்யாமல் இருந்தனர்.
தெலுங்கு சினிமா நடிகர்கள் பிரபாஸ், பவன கல்யாண் மற்றும் மகேஷ்பாபு போன்ற பலர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் கொரோனா நிவாரணநிதி அளித்தனர். மேலும் தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நிவாரண நிதி அமைப்பினை உருவாக்கியுள்ளனர். நடிகர் சிரஞ்சீவி மற்றும் பிலிம் சேம்பர் இணைந்து உருவாக்கிய இதன் மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தெலுங்கில் நடிகர்கள் மட்டுமே உதவி செய்து வருவதாக விமர்சனம் எழுந்தது.
தெலுங்கு சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் யாரும் நிதி உதவி அளிக்கவில்லை என்கிற விமர்சனம் அதிகரித்துவந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா முண்ணனி நடிகையான காஜல் அகர்வால் கொரோனா நிவாரண நிதியாக உதவி வழங்கியுள்ளார். பெஃப்சி்அமைப்பிற்கு 2 லட்சம், தெலுங்கு திரையுலகிற்கு 2 லட்சம், மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு 1 லட்சம், பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார். தற்போது இயக்குனர் சங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.