புதுச்சேரி: கொரோனாவை கட்டுப்படுத்திய புதுவை அரசு! 5 பேருக்கு மட்டுமே சிகிச்சை! கைதட்டி வழியனுப்பிய மகிழ்ச்சி சம்பவம்.!!

0
133

புதுச்சேரி: கொரோனாவை கட்டுப்படுத்திய புதுவை அரசு! 5 பேருக்கு மட்டுமே சிகிச்சை! கைதட்டி வழியனுப்பிய மகிழ்ச்சி சம்பவம்.!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடின உழைப்பு காரணம் என்று கூறப்படுகிறது.

புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பால் 8 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எட்டு நபர்களில் 72 வயதான மருத்துவ சிகிச்சை பெற்றதில் குணமாகி கடந்த வாரம் உடல்நலத்துடன் வீட்டுக்கு சென்றார். மற்றொரு 71 வயதான முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பலனின்றி கடந்த 11 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒட்டுமொத்தமாக இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அரியாங்குப்பம் சொர்ணா பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்று குணமாகியதால் அவரை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட கைதட்டி வழியனுப்பி அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரியில் தற்போது 5 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் உடல்நலமும் மிக நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வர அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்களின் முழு ஒத்துழைப்பே காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா முற்றிலும் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறமுடியாத சூழலே இருந்து வருகிறது. மேலும் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது. அதுவரை அனைவரும் பாதுகாப்புடன் இருப்போம் என்று மாவட்ட ஆட்சியர் அருண் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Previous articleசமூக இடைவெளி கடைபிடிக்க சொல்லும் தமிழ் வெண்பா : அன்றே எழுதப்பட்ட ஆச்சர்ய தகவல்..!!
Next articleஊரடங்கு நேரத்தில் உள்ளே புகுந்து தனிமை! லோடுமேன் வீட்டில் லோக்கல் போலீஸ் செய்த காரியம்! கதவை தட்டியபோது தகராறு.!