அமெரிக்காவில் 6 லட்சம் கொரோனா பாதிப்பு! மூன்று கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்! – டொனால்ட் டிரம்ப்
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்காவில் 3 கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்பை உண்டாக்கியுள்ளது. உலகளவில் அமெரிக்கா நாட்டில்தான் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை அமெரிக்காவில் 6 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருகிறது.
அதிக காலம் நாடு முடக்கப்பட்டுள்ளதால் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதன் காரணமாக உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் போதைப் பொருட்கள் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
முதல் கட்டம்: தேவையற்ற பயணங்கள் மற்றும் கூட்டமாக கூடுவதற்கு தடை உள்ள நிலையில் வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் தீவிர மனித இடைவெளி கடைபிடிப்புடன் இயங்கலாம் என்று கூறியுள்ளார்.
இரண்டாம் கட்டம்: பயணங்களுக்கான தடைவிதிப்பு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மதுபானக் கடைகள் விதிமுறைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்படும்.
மூன்றாம் கட்டம்: கொரோனா பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் தனிமனித இடைவெளி கடைபிடிப்புடன் மனிதர்கள் கூடவும், நிறுவனங்களில் கட்டுப்பாடு இன்றி ஊழியர்கள் பணிபுரியலாம். மேலும் மருத்துவமனைகளுக்கு செல்லவும், மதுபான கடைகள் முழுமையாக இயங்கவும் முழுமையான அனுமதி அளிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.