சீன ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்! 94% தவறான முடிவு தருவதாக புகார்! உண்மை காரணம் என்ன.?
சீனாவில் இருந்து கொரோனா பாதிப்பை உறுதிசெய்ய வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
கொரோனா தொற்று இருப்பதை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து ரேபிட் கிட் எனும் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டன. மருத்துவ சோதனைக்கு இவை தரமற்றவை என்றும் 95% தவறான முடிவை காட்டுவதாக பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவ சோதனைகளுக்கு சீன ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்கு 2 நாட்கள் தடைவிதிப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது்.
மருத்துவ சிகிச்சைக்காக கடந்த வாரம் 6.5 லட்சம் ரேபிட் கருவிகளும், அதன்பிறகு இரண்டாம் கட்டமாக 3 லட்சம் கருவிகளும் வாங்கப்பட்டன. இந்த கருவிகளை மாநில அரசுகளுக்கு பிரித்து கொடுப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அதிக பாதிப்பு இருக்கும் சூழலில்
தமிழக மாநிலத்திற்கு 24 ஆயிரம் கருவிகள் மட்டுமே வழங்கப்பட்டது.
இந்நிலையில் ரேபிட் கருவியை பயன்படுத்தி அதன் மூலம் வரும் சோதனை முடிவுகள் 95% தவறாக இருப்பதாக மாநில அரசுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு புகாரும் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு சீன ரேபிட் கருவிகளை மருத்துவ சோதனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்று நேற்று தடைவிதிக்கப்பட்டது. மீண்டும் எப்போது மருத்துவ சோதனை நடத்தலாம் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை குறை கூறிவருகின்றன.