ஊரடங்கு நேரத்தில் மீனை வாங்க குவிந்த மக்கள்! சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா உண்டாகும் அபாயம்!

Photo of author

By Jayachandiran

ஊரடங்கு நேரத்தில் மீனை வாங்க குவிந்த மக்கள்! சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா உண்டாகும் அபாயம்!

ஊரடங்கு உத்தரவை மீறி மீன் வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய சம்பவம் மைசூரில் அரங்கேறியுள்ளது. இங்கு சமூக இடைவெளி என்பது கேள்விகுறியாகி உள்ளது.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. குறிப்பாக மைசூர் பகுதியில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நிறுவனம் ஒன்றில் சீன மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வந்த காரணத்தால் அங்கு வேலைபார்த்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அங்கு பணிபுரிந்து 80 நபர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகமான நஞ்சன் கூடு பகுதியில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றி திரிகின்றனர். குறிப்பாக அப்பகுதி கிராமத்தில் உள்ள ஏரிகளில் மீன்பிடி வேலை தினமும் நடைபெறுவதால் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. இதனால் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் போன்ற எவ்வித முன்னெச்சரிக்கை பாதுகாப்பும் இல்லாமல் மீனை வாங்க கூட்டமாக மக்கள் திரண்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதுகாப்பு குறித்து மாநில அரசு, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பலர் விதிமுறைகளை பின்பற்றாமல் நடப்பது பலருக்கு கொரோனா அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.