நான் இருக்கேன் நிம்மதியா இருங்க.! சொன்ன சொல் மாறாத முதல்வர்.!!
தாய்க்கு மருத்துவ உதவி தேவை என்று கூறிய இராணுவ வீரரின் அவசர கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி அசத்தியுள்ளார்.
நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருகிறது. பொதுமக்கள் வீட்டில் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணையத்தின் மூலம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.
அவர் டுவிட்டரில் வைத்த கோரிக்கை பின்வருமாறு; ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயதில் வீட்டில் தனியாக உள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை, சகோதரனும் இல்லை ஆகவே எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை என்று கூறியிருந்தார்.
இதற்கு முதல்வர் தரப்பில் உடனடியாக பதில் அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது; தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சல், இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சினைகளும் இல்லை. எனவே தாங்கள் தைரியமாகவும், நிம்மதியாகவும் இருங்கள் என்று முதல்வர் தரப்பில் உடனடி செயல்பாடு மூலம் அசத்தியுள்ளனர். மருத்துவ சிகிச்சை அளித்த நிபுணர்களுடன் சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்தவாறு புகைப்படத்தையும் அனுப்பி வைத்தனர்.
இதற்கு நன்றியுடன் பதில் அனுப்பிய இராணுவ வீரர், மிக்க நன்றி ஐயா நான் எதிர்பாராத உதவியும் ஆதரவும் அளித்த முதல்வருக்கு நன்றி என்ற வார்த்தை மட்டும் போதாது என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன் Jaihind என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.