கொரோனா தீவிரமாக பரவியுள்ள மாவட்டங்களில் குறிப்பிட்ட 2 நாட்களுக்கு மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடமாவட்டமான சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் முழுமையாக கடைபிடிக்குமாறு உத்தரவு அமலாகியுள்ளது.
கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வருகிற 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கபட உள்ளது. இந்த பொதுமுடக்க நாட்களின் போது வங்கிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஜூன் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் மட்டுமே வங்கிகள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. பணியில் 33 சதவீத ஊழியர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வருகிற 29, 30 தேதிகளில் மட்டுமே செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் ஏடிஎம் மற்றும் போக்குவரத்து வழக்கம்போல இயங்கும் என்றும் தமிழக அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஒவ்வொரு நாளும் சென்னை பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.