கொரோனாவின் கோரப்பிடியில் அதிமுக எம்எல்ஏ குடும்பம்!

Photo of author

By Jayachandiran

திருபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.பழனிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதன்பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனையில் முடிவில் தொற்று உறுதியானதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்பு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அதிமுக எம்எல்ஏ கே.பழனிக்கும் கொரோனா தொற்று உறுதியானது அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.