சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ரேசன் அட்டைகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரணமாக இன்று வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கை பிறப்பித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கொரோனா தீவிரமாக பரவியுள்ள சென்னை, காஞ்சிபுரம் உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள ரேசன் அட்டைகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரணமாக வழக்கப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று முதல் இதற்கான பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நாளுக்கு 200 அட்டைக்கு மட்டுமே பணம் தரப்படும். இது ஜூன் 22 முதல் வருகிற 26 ஆம் தேதி வரை ரேசன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை வைத்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் செய்து வருகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் வாங்காதவர்கள் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் அந்தந்த பகுதி ரேசன் கடைகளில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.