கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வருகின்றன. அதன் காரணமாக பல்வேறு தடுப்பு ஊசிகளை பயன்பாட்டில் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அதேபோல அமெரிக்கா நிறுவனத்தின் தயாரிப்பான பைசர் தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என பரவலாக நம்பப் படுகிறது. ஆனால் எல்லா கொரோனா தடுப்பூசியிலுன் சிறிய அளவு பக்க விளைவுகள் ஏற்படும் ஆனால் கொரோனா தொற்றின் பாதிப்பை விட இது குறைவு என்பதால், பக்கவிளைவுகள் ஏற்படுவும் செய்கின்றன ஆனால் கொரோனாவைக் காட்டிலும் இது பரவாயில்லை என்பதால் உலக மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசால் கட்டளை இடப்படுகிறது.
கண்டிப்பாக போட்டு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட்டு, அதற்கான சான்று இருக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் அறிவித்து வரும் நேரத்தில், அதேபோல் இந்த பைசர் தடுப்பூசியும் பக்க விளைவுகள் ஏற்படுவது மிக மிகக் குறைவு என்பதன் காரணமாக உலக நாடுகள் பலவும் இந்த தடுப்பூசியை அமெரிக்க நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்து தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கி வருகின்றன.
அந்த வகையில் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் கூட பைசர் கொரோனா தடுப்பு ஊசி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நியூசிலாந்தில் தடுப்பூசியால் நிகழ்ந்த முதல் மரணம் என்றும் சொல்கின்றனர். இது குறித்து நியூசிலாந்து தடுப்பூசி கண்காணிப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மாரடைப்பு நோயால் இறந்துள்ளார் என்றும் தடுப்பூசியின் காரணமாக அந்த பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கலாம். அதே சமயம் அவருக்கு வேறு சில மருத்துவப் பிரச்சினைகளும் இருந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.