மனைவி இறந்ததால் நானும் இறந்து போகிறேன்! எனக்கு வர வேண்டிய பணமே 5 லட்சம் வரை உள்ளது!

0
71

மனைவி இறந்ததால் நானும் இறந்து போகிறேன்! எனக்கு வர வேண்டிய பணமே 5 லட்சம் வரை உள்ளது!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கூட்ரோட்டில் போடி நத்தம் கிராம பகுதியை சேர்ந்தவர் 35 வயதான சிவாஜி என்கின்ற வரதராஜ். இவரது முதல் மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மரணமடைந்து விட்டார். அணைக்கட்டு அருகே உள்ள சங்க நடை கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா என்ற 23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு அரிசி கடை வைத்துள்ளார். அதிலேயே ஒரு உரகடையும் வைத்து உள்ளது குறிப்பிடத் தக்கது. மேலும் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். சீட்டும் நடத்தி வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து இருந்தார்.

ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற பேச்சினால் அவர்கள் இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். கொரோனா காலம் வரை எல்லாம் நல்ல நிலையிலேயே இருந்தது. இவர்களது வருமானம் கொரோனாவின் காரணமாக, மாறி விட்டது. இவரிடம் சீட்டு எடுத்தவர்கள் பணம் கொடுக்கவில்லை. கடன் வாங்கியவர்களும் திருப்பித் தரவில்லை. அரிசி கடையில் கடன் வாங்கியவர்களும் எதுவும் திருப்பி செலுத்தாத, காரணம் என எல்லாம் சேர்ந்து இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவரும் உறங்கிய நிலையில் மனைவி திடீரென்று அறையின் உத்தரத்தில் சேலையின் மூலம் தூக்குப்போட்டு உயிரிழந்துவிட்டார். இரவில் எழுந்த வரதராஜன் மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர், ஒரு ஆறு பக்க கடிதத்தை எழுதி வைத்து விட்டு அவரும் அதே இடத்திலேயே தூக்கில் தொங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் இருவருமே வெளியில் வராததன் காரணமாக அருகில் உள்ளோர் அனைவரும் கதவை தட்டி பார்த்துள்ளனர்.

ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்ளேயும் எந்த வித சத்தமும் கேட்கவில்லை என்பதன் காரணமாக சந்தேகமடைந்த அவர்கள் அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எனவே போலீசார் விரைந்து வந்து அந்த கதவை உடைத்து அவர்களின் நிலைமையை பார்த்தனர். ஒரே இடத்தில் இருவரும் தூக்கில் தொங்கியதை பார்ப்போரின் மனதை உருகச் செய்தது. மேலும் அங்கிருந்து உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர் போலீசார். அதன்பின் இருவரது சடலங்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

வேலூர் டி.எஸ்.பி யும் நேரடியாக இந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அந்த ஆறு பக்க கடிதத்தில் வரதராஜ் இவ்வாறு எழுதியிருந்தார். நாங்கள் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தோம். மனைவி இறந்ததன் காரணமாக மட்டுமே நானும் இறக்கிறேன். எங்களது இறப்புக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டு, நான் ஏலச்சீட்டு நடத்தி வருகிறேன். சீட்டு எடுத்தவர்களும் பணம் கட்டவில்லை. கடன் வாங்கியவர்களும் பணம் கட்டவில்லை. அதேபோல் அரிசி மற்றும் உரக்கடையில் கடன் வைத்தவர்களும் கடனை திருப்பிச் செலுத்தவில்லை.

எனக்கு இதுவரை எட்டு பேரிடம் 5.28 லட்சம் கடன் வரவேண்டிய பணம் உள்ளது. மேலும் அந்த கடிதத்தில் இவர் கடன் வாங்கிய நபர்கள் மற்றும் சீட்டு மூலம் பணம் எடுத்தவர்கள் என அவர்களது தொலைபேசி எண்கள், வீட்டு முகவரி எல்லாவற்றையும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே அவர்களையும் அழைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.