தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி!
அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய
“கோவிஷீல்ட் தடுப்பூசியின்” மூன்றாம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் முதல் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.மூன்றாம் கட்ட பரிசோதனைகளை 17 இடங்களில் 1600 பேருக்கு உட்செலுத்தி பரிசோதனை ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில்,தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மூன்றாம் கட்ட பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் இந்த தடுப்பூசியை பலருக்கு
உட்செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்நிலையில் பரிசோதிக்கப்பட்ட சிலருக்கு,சொல்ல முடியாத அளவிற்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.ஆனால் இது குறித்து எந்தவிதமான விரிவான அறிக்கையையும் அவர்கள் அனுப்பவில்லை.இதனைக் குறித்து இந்திய மருத்துவ ஒழுங்குமுறை ஜெனரல்,பக்க விளைவுகளை ஏற்படுத்தியும் ஏன் விரிவான விளக்கங்களை அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தடுப்பூசியை உருவாக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா,கூறியுள்ள விளக்கத்தின் படி,தன்னார்வலர்களுக்கு விவரிக்கமுடியாத பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி சோதனையில் இதுபோன்ற பின்னடைவுகள் ஏற்படுவது வழக்கமானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.இதனால் இந்தியாவில் மூன்றாம் கட்ட தடுப்பூசி பரிசோதனையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.