நாளை முதல் இவர்களுக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்படும்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் அந்த நாட்டில் மிகப்பெரிய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கியது.நோய்த்தொற்றின் கோரத் தாண்டவத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று தெரியாமல் சீனா சற்று திணறித்தான் போனது.

கோடிக்கணக்கான உயிரைப் பறிகொடுத்த பிறகு சுதாரித்துக் கொண்ட சீனா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது அதோடு சீனாவில் இந்த நோய் தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களை அந்த நாட்டு அரசாங்கம் சுட்டுக் கொன்றதாக சில வதந்திகளும் பரவத் தொடங்கினர்.

அத்துடன் இந்த நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவசர மருத்துவ மனைகள் உடனடியாக அந்த நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து சீனாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவிய இந்த நோய் தொற்று பரவாது தற்சமயம் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இதனால் அந்த நாட்டின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் கோபத்திலிருக்கிறது.

அதேநேரம் தற்சமயம் சீனாவில் புதிய நோய் தொற்று பரவி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது, ஆனாலும் மீண்டும் அங்கேயே நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

தொடக்கத்தில் இந்த நோய் தொடர்பாக வலையில் சிக்கித் தவித்து இந்தியா பின்பு மெல்ல, மெல்ல, சுதாரித்துக் கொண்டு மீண்டு எழ தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது மக்களை பாதுகாத்து வருகிறது மத்திய அரசு.

இந்த நிலையில், நாட்டில் இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி முகாமை மிகத் தீவிரமாக நடத்தி அனைவருக்கும் தற்போது செலுத்தும் விதத்தை வேகப்படுத்தியது மத்திய மாநில அரசுகள்.

அந்த விதத்தில் நோய் தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

நோய்த்தொற்றின் பாதிப்பு வீரியம் குறைவாக இருப்பதற்கு தடுப்பூசி முக்கிய காரணியாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் 12 முதல் 14 வயது வரையில் உள்ள சிறுவர்களுக்கு நாளைய தினம் முதல் நோய்தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதேபோல 60 வயதிற்கு மேற்பட்ட எல்லோருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா தெரிவித்திருக்கிறார்.