உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் எடுத்த முக்கிய முடிவு! அதிர்ச்சியில் ரஷ்யா!

0
97

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 19ஆவது நாளாக நீடித்து வருகிறது கடந்த 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திடீரென்று தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி போர் செய்து வருகின்றன.

ஆக்ரோஷமான ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக, உக்ரைன் உருக்குலைந்து போயிருக்கிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது.

அதேபோல உக்ரைன் தரப்பில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலரும் பலியாகியிருக்கிறார்கள் ரஷ்ய தரப்பிலோ ராணுவ தளபதி உட்பட ராணுவ வீரர்கள் பலர் பலியாகியிருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தரப்பு உயிரிழப்புகளை ரஷ்யா பகிரங்கமாக ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போரை நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐநா சபை, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் கோரிக்கை வைத்தும் ரஷ்யா அதனை கண்டுகொள்ளவில்லை.

அதேநேரம் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என இந்தியா ரஷ்யாவிடம் வலியுறுத்தவேண்டும் இந்தியா தெரிவித்தால் நிச்சயமாக ரஷ்யா நல்லதொரு முடிவை மேற்கொள்ளும் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து இந்தியாவும் ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பேச்சுவார்த்தையில் இறங்கி நல்லதொரு தீர்வை காண வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியது.

ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது உக்ரேனின் ராணுவ பலம் மிகவும் குறைவாக இருந்தாலும் கூட இன்றளவும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷ்யப் படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன. அதேசமயம் வடக்கு மற்றும் கிழக்கில் கியூவை சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகிறார்கள் ரஷ்ய படையை சேர்ந்தவர்கள்.தலை நகரை சுற்றி வளைக்க தீவிரம் காட்டி வருகிறார்கள் ரஷ்ய படையைச் சேர்ந்தவர்கள்.

இந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையேயான போரில் அமெரிக்காவுக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ஜோ பைடன் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது ஆக்கிரமிப்பு ரஷ்ய படைப்பு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் மேலும் உக்ரைனிய உயிர்களை காப்பாற்ற அவர்களுக்கு நிதியுதவி மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும் அந்த நாட்டு அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்போம் என்று பதிவிட்டிருக்கிறார்.

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவிற்கும், எப்போதுமே அரசியல் ரீதியாக போட்டியில்லை என்றாலும் வணிக ரீதியாக மிகப்பெரிய எதிரி நாடாகவே இருநாடுகளும் திகழ்கின்றன. 2 நாடுகளும் வல்லரசு நாடுகள் என்றாலும்கூட வணிகரீதியாக மிகப்பெரிய எதிரி நாடாக இருக்கும் ரஷ்யாவை எவ்வாறு வீழ்த்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாக கருதப்படுகிறது.

ஆகவே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க அதிபர் முடிவு செய்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

உக்ரைனுக்கு உதவி செய்ய அமெரிக்கா நினைத்தாலும் கூட ராணுவ ரீதியாக அந்த நாட்டிற்கு அமெரிக்கா உதவி செய்தால் அது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றாக உணர்ந்திருக்கிறார்.

அதாவது உக்ரைன் நாட்டிற்கு உதவி புரியும் விதத்தில் தன்னுடைய ராணுவத்தை அமெரிக்கா அனுப்பினால் அதன் பின்னாலேயே நேச நாட்டுப் படைகளும் அணிவகுத்து நிற்கும் அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக அது மற்றொரு உலகப்போருக்கு வழி செய்துவிடும் என்பதை அமெரிக்க அதிபர் நன்றாக உணர்ந்திருக்கிறார்.

ஆகவேதான் ராணுவ ரீதியில் அல்லாது ராணுவ தளவாடங்கள் மூலமாக உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி புரிந்து வருகிறது என சொல்லப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் உள்ளிட்ட இரு நாடுகளுக்கிடையே உக்கிரமாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் அதனை தனக்கு சாதகமாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதுதான் அந்த நாட்டின் சாணக்கியத்தனம் என்று சொல்லப்படுகிறது.