கொரோனா தடுப்பூசி இலவசம் – மத்திய அமைச்சர் தகவல்!

Photo of author

By Parthipan K

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவதற்கு தனிமைப்படுத்துதல், முறையான உணவு பழக்கம் மற்றும் தூய்மை போன்ற முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டது. 

அதன்பின் இந்த நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதிலும் பல கட்ட சோதனைகளை கடந்து தற்போது தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட உள்ளது. சமீபத்தில் பீகாரில் தேர்தலுக்காக சில முக்கிய திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. 

அதில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அங்கு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக ஒடிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி கூறியதாவது : 

“கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மோடி அவர்கள் தெரிவித்து உள்ளதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஊசி தலா ஒரு நபருக்கு ரூபாய் 500 செலவாகும் என்றும் அதை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.