11 மாதங்களாக செய்யப்பட்ட 3 கிலோ தங்க கிரீடம் கடவுளுக்கு காணிக்கை! எந்த கோவிலுக்கு தெரியுமா?

0
115

3 கிலோ தங்க கிரீடத்தை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு நகை கடை உரிமையாளர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெயந்திலால் சலானி என்பவர் 3 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார். இது பாண்டியன் கொண்டை என்று சொல்லப்படுகிறது. இந்த 3 கிலோ கிரீடத்தில் வைரம், மரகதம் போன்ற ஒன்பது வகையான விலை உயர்ந்த நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

11 மாதங்களாக ஜெயந்திலால் அவரது நகை கடையிலேயே வைத்து வடிவமைத்துள்ளார்.

இதனையடுத்து இன்று காலையில் தனது குடும்பத்தினருடன் பார்த்தசாரதி கோவிலுக்கு வந்து உற்சவருக்கு பாண்டியன் கொண்டை என்று அழைக்கப்பட்ட 3 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக உற்சவருக்கு சமர்ப்பித்துள்ளார்.

பாண்டியன் கொண்டை என்பது ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதருக்கு பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில் பாண்டிய மன்னனால் கொடுக்கப்பட்ட கிரீடம் பாண்டியன் கொண்டை என்று அழைக்கப்பட்டது. அதன்பின் இவ்வளவு விலை உயர்ந்த காணிக்கையை செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.

author avatar
Kowsalya