கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல நாடுகளுக்கு விநியோகம் – பிரதமர் மோடி உரை!

Photo of author

By Parthipan K

காணொலி காட்சி வாயிலாக உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர் சுமார் 150 நாட்களுக்கும் மேல் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை விநியோகம் செய்துள்ளது இந்தியா.

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்கு உபயோகிக்க ஆரம்பித்த 12 நாட்களில் 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார் பிரதமர் மோடி.

இன்னும் சில மாதங்களில் 3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டிருக்கும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்தார். கொரோனா நோய் தொற்றால் இந்தியா தான் முதலில் பாதிக்கப்படும் என்று பல நாடுகளும் கருத்து தெரிவித்த நேரத்தில் இந்தியா கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தற்போது முன்னேற்றத்தை கண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலின் காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் தங்களின் விமானப் போக்குவரத்தை முழுவதுமாக ரத்து செய்த காலகட்டத்தில், இந்தியா லட்சக்கணக்கான வெளிநாட்டு மக்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்ததை குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் கொரோனா தடுப்பு மருந்துகளை, இந்தியா விநியோகம் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி பெருமிதம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.