சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா…

Photo of author

By Parthipan K

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா…
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலின் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில்  கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2000 மேல் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பல் வந்தது. அதில் இருந்த 19 பேரை சோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.

   கொரோனா வைரஸ் அறிகுறிகள் உடன் வந்தவர்களை கிண்டி கிங்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.