கொலைவெறி கொரோனா வைரஸ்!!! அஞ்சி நடுங்கும் உலக நாடுகள்

Photo of author

By Parthipan K

கொலைவெறி கொரோனா வைரஸ்!!! அஞ்சி நடுங்கும் உலக நாடுகள்

கொரோனா வைரஸ் இந்த வைரஸ் பெயரை கேட்டால் இன்று உலகநாடுகள் அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, ஆசிய நாடுகள் அதிர்ந்துள்ளது. 2003 ல் பரவிய சார்ஸ் வைரஸை விட கொடூரமான வைரஸாக பார்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனமே கொரோனா பாதிப்பை அவசர நிலையாக அறிவிக்கும் அளவுக்கு அந்த வைரஸ் தாக்கம் வேகமாக உள்ளது.

2019-vCoV என்ற வைரஸ் தான் சீனாவின் உகான் நகரில் புறப்பட்டு உலகில் 25 நாடுகளுக்கு பரவி விட்டது. ஏன், நம் அண்டை மாநிலமான கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விமானநிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது

சீனாவில் அனைத்து மாகாணங்களிலும் பரவிய கொரோனா 400க்கும்  அதிகமானோரை பலிவாங்கி இருக்கிறது. நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீன அரசு கவலையடைந்துள்ளது. மேலும், 40,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீன அரசு என்ன செய்வது என்று தெரியாமல் வைரஸை கட்டுப்படுத்த உகான் உள்ளிட்ட மாகாணங்களில் போக்குவரத்துக்கு தடை செய்துள்ளது. அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்குகாக 10 நாட்களில்  மருத்துவமனைகளைக் கட்டி சாதனை படைத்துள்ளது.

சீனாவில் உலகின் முன்னனி நிறுவனமான கூகுள், ஆப்பிள் அலுவலகம் காலவரையின்றி மூடியுள்ளது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனா சென்றவர்கள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸால் உலக நாடுகள் சீனாவை தனிமைப்படுத்தி வருகிறது.

கொரோனாக்கு மருந்து கண்டுப்பிடிக்க உலகநாடுகள் முயற்சித்து வருகிறது. இதற்கிடையில், தாய்லாந்தில் இந்த வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஆனால், கொரோனாவை குணப்படுத்துமா என உறுதியாக தெரியவில்லை.

கொரோனா வைரஸ் முதலில் விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது. காய்ச்சல், வறண்ட இருமல், சிறுநீரக செயல் இழப்பு என கடைசில் மரணம் வரை செல்கிறது கொரோனா. தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கொரோனா பாதிப்பு பற்றி தினம்தோறும் செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் சாதாரணமான செய்தியாக பார்க்கிறோம். ஆனால், சீன மக்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். சீனா விரைவில் பழைய நிலைக்கு திரும்ப நாம் அனைவரும் பிராத்திப்போம்.

சார்ஸ் போல இதுவும் ஆசிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இதனை, எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன…

.