சேலம் மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!! அச்சத்தில் பொதுமக்கள்!!
சேலத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று காவல்துறை அதிகாரியும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சிலநாட்களாக சற்று அதிகரித்து வருகிறது.இதனால் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் முதற்கட்டமாக மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு என சிறப்பு சிகிச்சை வார்டுகள் தயார்படுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று தற்போதும் சேலம் இரும்பாலை உள்ளிட்ட இடங்களில் கொரோனா தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் மற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் மூன்று பேருக்கும் கொரோனா பாதிக்கு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று காவல்துறை அதிகாரிகளும் அவர்களது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இவர்கள் 3 பேருடன் தொடர்பில் இருந்த மற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 23 ஆக உயர்ந்துள்ளது.