தமிழகம் முழுவதும் தடை..!! ஊரடங்கு உத்தரவை மீறினால் சிறை தண்டனை! இன்று எது இயங்கும்.? எதுவெல்லம் இயங்காது.?

Photo of author

By Jayachandiran

தமிழகம் முழுவதும் தடை..!! ஊரடங்கு உத்தரவை மீறினால் சிறை தண்டனை! இன்று எது இயங்கும்.? எதுவெல்லம் இயங்காது.?

உலகளவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 17,138 பேர் உயிரிழந்தனர். மேலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,91,947 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நேற்றிரவு 12 மணி முதல் ஊரடங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், 500 க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடிய வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த வகையில் நேற்றிரவு முதல் வருகிஎன்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி அவர்களும் நேற்றிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கும் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று கூறியுள்ளார்.

பொதுமக்களிடையே பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், கூட்டம் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சினிமா தியேட்டர், பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களுக்கும் மதுக்கடை பார்களும் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையான காய்கறி கடைகள், மளிகை கடைகள், அரிசி மண்டிகள், கோயம்பேடு மார்க்கெட், மருந்தக கடைகள், நியாயவிலை கடைகள் போன்றவை திறக்க அனுமதி உள்ளது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தடையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் தமிழக அரசின் சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 5 பேர் கூடுவதற்கு தடை அதேபோல் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றும் நபர்கள் 1 வருடம் சிறையில் அடைக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவித்த நிலையில் பல்வேறு மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.