இந்த ஒரு அறிகுறி இருந்தாலே இனி கொரோனா தான்! உருமாறிய வைரசின் கொடூர தாக்குதல்
நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது.இந்நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும்,இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே உள்ளது.இதனையடுத்து மாநில அரசுகள் பலவும் மீண்டும் ஊரடங்கு விதிகளை கடுமையாக்கியுள்ளன.
தற்போது வரை கொரோனாவின் அறிகுறிகளாக சளி,இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவைகளை தான் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதே போல கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் நுரையீரலை தான் தாக்கும் என்றும் கூறி வந்தனர்.ஆனால் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா அந்த அளவிற்கு அறிகுறிகளை ஏற்படுத்தாது எனவும்,இது மொத்த உடலையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.ஒரு கட்டத்தில் இது மூளையை கூட செயலிழக்க செய்யும் சென்றும் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
Rutgers Robert Wood Johnson Medical School என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இதை உறுதி செய்துள்ளது.இந்த ஆய்வில் கொரோனாவின் புதிய அறிகுறியாக இரத்த உறைவு பிரச்னையை தெரிவித்துள்ளனர்.அதாவது இதில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் கைகளில் தொடர்ச்சியான இரத்த உறைவு பிரச்னையை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட COVID-19 ஆல் ஏற்படும் அழற்சி எவ்வாறு மேல் இரத்த இரத்தக் கட்டிகளை பாதித்து உறைவை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அதே போல விஞ்ஞானிகளுக்கு கொரோனா சிகிச்சையளிப்பதற்கான சிறந்த முறையையும் வழங்கியுள்ளது.
இந்த ஆய்வில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் 85 வயதிற்கு மேற்பட்ட பல நோயாளிகள் கையின் மேற்ப்பகுதியில் கடுமையான இரத்த உறைவை சந்திப்பதாக கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் கைகளில் வீக்கம் உண்டாகிறது என்கிற காரணத்திற்காக மட்டுமே சிகிச்சை பெற்றுக்கொள்ள பலர் மருத்துவமனையை நாடியுள்ளனர். பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நோய் தோற்று உள்ளதை உறுதி செய்யும் பாசிடிவ் ரிசல்ட் வந்துள்ளது. பின் அதன் தொடர்சியாக அவர்கள் இரத்த உறைவு பிரச்னையை சந்தித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு கொரோனாவிற்கான மற்ற எந்த அறிகுறிகளும் இல்லை. ஆக்ஸிஜன் அளவும் சீராக இருந்துள்ளது. புதியதாக கண்டறியப்பட்ட இந்த அறிகுறி இதுவரை பெரிய ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பாதிக்கப்பட்ட நபர்களில் பலர் தாங்கள் கொரோனாவால் தான் பாதிக்கபட்டிருக்கிறோம் என்று தெரியாமலே இருந்துள்ளனர். இவர்கள் இப்படி சாதரணமாக இருப்பதன் மூலமாக தொற்றின் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதையே இந்த ஆய்வானது எச்சரிக்கிறது.
இதுமட்டுமன்றி ஆரம்பத்தில் கொரோனாவிற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை என்றாலும் கைகளில் உருவான இந்த இரத்த உறைவுப் பிரச்னை அடுத்து நுரையீரலையும் பாதிக்கும். இதனால் உயிருக்கே ஆபத்து என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது. எனவே கைகளில் வலி, வீக்கம், கைகளை தூக்கமுடியவில்லை உள்ளிட்ட எந்த ஒரு அறிகுறிகளை உணர்ந்தாலும் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும்,கொரோனாவிற்கான பரிசோதனையை செய்து கொள்ளலாம் என்றும் இந்த ஆய்வு உணர்த்துகிறது.