கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

Photo of author

By Jayachandiran

கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.500 ஒதுக்கீடு செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நேற்று அறிவித்தார்.

கொரோனா பாதிப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி சட்டப்பேரவையில் நேற்று பேசினார். அப்போது, பிரதமர் கூறிய ஊரடங்கு உத்தரவை நாடெங்கும் செயல்பட்டதோடு, தமிழகத்தில் முழுமையாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும், ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றி கூறினார். கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

மேலும், கொரோனா பற்றிய வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்களை தொடர்ந்து மருத்துவ ரீதியாக கண்காணிப்பு நடந்து வருவதாகவும் கூறினார். இந்த அசாதாரண சூழலில் மருத்துவப் பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதற்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.