உலகளவில் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது!

0
57

கடந்த 2019 ஆம் வருடம் சீன நாட்டின் வூகான் நகரில் தோன்றியதுதான் கொரோனா வைரஸ்.முதலில் அங்கே தோன்றிய இந்த நோய்த்தொற்று பரவல் சீனாவில் மிகப்பெரிய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கியது. இதனால் அந்த நாடு மிகப் பெரிய இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தது.

பின்பு சுதாரித்துக் கொண்ட சீனா மெல்ல, மெல்ல, அந்த நோய்தொற்று பிறவியில் இருந்து தன்னை மீட்டெடுத்து கொண்டது. ஆனால் இந்த நோய்த் தொற்று பரவலை பரவ செய்தது சீனாதான் என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அதுதான் உண்மையும் கூட என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த நோய்த்தொற்று பரவல் சீனா நாட்டிலிருந்து தான் பரவியது என்று ஒரு ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த நோய்த்தொற்று பரவல் ஊடுருவி பல உயிர்களை பலிவாங்கியது. பல முக்கிய பிரபலங்கள் இந்த நோய் தொற்றுக்கு பலியானார்கள்.

இந்த நிலையில், இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சாதுரியமான பல விஷயங்களை மத்திய அரசு கையாண்டது அதாவது முழுமையான ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளி, உள்ளிட்ட பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது மத்திய அரசு.

மேலும் மிக விரைவாக இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆகவே தற்சமயம் நாட்டில் நோய்த்தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், பிரான்ஸ், உள்ளிட்டவை முதல் 5 இடங்களில் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் எண்ணிக்கை 38 கோடியை தாண்டி இருக்கிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44.73 கொடியை கடந்திருக்கிறது.

மேலும் இந்த நோய்த்தொற்று தாக்குதலுக்கு ஆளாகி பலியானோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்தது. இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்களில் 6 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுபவர்களில் 70000க்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.