மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்!
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வருகின்றது.அதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவள நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.கடந்த 3 ஆம் அலையின் போது உச்ச நீதிமன்றதில் இருந்த நீதிபதிகள் அனைவரும் வீட்டில் இருந்தே இனைய வழியின் மூலமாக பணிபுரிந்து வந்தனர் . அதனையடுத்து தற்போதுதான் கொரான பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் அனைத்து துறைகளும் தனது இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.
கொரோன பரவலை கட்டுப்படுத்த அரசு பல வழிமுறைகளை கூறினாலும் ஒருவர் கூட அதனை முறையாக பின்பற்றுவதுயில்லை.கொரோன பரவல் அதிகம் காணப்படும் இடங்களில் இன்னும் சில தளர்த்தப்படாத கட்டுபாடுகள் இருந்துவந்தாலும் தற்போது கொரோன தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனால் தலைமை நீதிபதி உத்தரவு ஒன்றை வெளிட்ட்டுள்ளார்.அதில் நீதி மன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும். அதிகமாக கூட்டம் போடுவதை தவிர்க்க வேண்டும். வழக்கறிஞர்களுடன் வழக்கு தொடர்பான ஒருவர் மட்டுமே நீதிமன்ற விசாரணை அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைவரும் கைகளை அடிகடி கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களை காண வரும் வழக்காடிகள்,குமாஸ்தாக்கள் என அனைவரும் இந்த கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டதின்படி சிறிதளவு கொரோன பரவல் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.