கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு! திடீர் லாக்டவுன்!

கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு! திடீர் லாக்டவுன்!

ஓராண்டு காலமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தது.மக்கள் வீட்டினுல்லே முடங்கி கிடந்தனர்.கொரோனாவின் தாக்கம் சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் வெளியே செல்ல  அனுமதிக்கப்பட்டனர்.முதலில் அதிக அளவு கட்டுபாடுகளுடன் மக்கள் வெளியே சென்றனர்.நாளடைவில் கொரோனா என்ற அச்சமில்லாமல் சமூக இடைவெளிகளையும் பின்பற்றாமல் மக்கள் சுதந்திரமாக வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டனர்.அதன் விளைவாக மீண்டும் கொரோனா அதிக அளவு பரவி வருகிறது.மும்பை மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவு பரவியுள்ளது.

மத்திய அரசு கூறிய வழிமுறைகளை பின்பற்றாததால் மக்கள் அதிக அளவு கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர்.அதில் நேற்று மட்டும்  16,620 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.இது ஓராண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு ஓர் நாளிலே அதிக அளவு எண்ணிக்கையை எட்டியுள்ளது.இந்த அளவுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தால் அதிக படியான உயிர்களை இழக்க நேரிடும்.அதர் மாநிலங்களுக்கும் வேகமாக பரவும்.நேற்று ஓர் நாளில் மட்டும் 50 ற்கு மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மொத்தமாக 52,811 பேர் கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 8,861.கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.88 லட்சம் பேர் ஆகும்.ஆகையால் கொரோனா அதிக அளவு பரவாமல் இருக்க மக்கள் மத்திய அரசு கூறும் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.அதனையடுத்து கொரோனா பாதிப்பை தடுக்க கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80,705 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.மேலும் மக்கள் வெளியே நடமாடுவதால் கொரோனாவானது அதிக அளவு பரவ வாய்புகள் உள்ளதால் அரசாங்கம் அந்த மாநிலத்திற்கு பல கட்டுபாடுகளை போட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியது,மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.அதுமட்டுமின்றி மக்கள் அரசாங்கம்  கூறும் வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.மேலும் சில பகுதிகளில் கட்டாயமாக ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.அதனைத்தொடர்ந்து கேரளா,டெல்லி,ராஜஸ்தான்,கோவா போன்ற இதர மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிராவிற்கு வருபவர்கள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்பதை கட்டாயமாக்கியுள்ளனர் .

Leave a Comment