அதிமுகவை கட்டம் கட்டிய டிடிவி தினகரன்!

0
74

சசிகலாவை அதிமுகவில் இருந்து விலகி வைத்ததில் இருந்து சசிகலா தினகரன் ஆகியோருக்கு அதிமுக மீது கடுமையான வெறுப்பு உண்டானது இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எதிரான பல்வேறு செயல்களில் அவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்தார்கள்.அந்த விதத்தில் பல்வேறு வகையிலும் ஆளும் கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நெருக்கடி கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை வைத்தே அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது. இருந்தாலும் எதற்கும் அசைந்து கொடுக்காத அதிமுக தலைமை எது வந்தாலும் பார்த்துவிடுவது என்று முடிவு உறுதியாக இருந்தது.

அதன் பிறகு அதிமுகவின் வலிமையை உணர்ந்து கொண்ட டிடிவி தினகரன் அந்த கட்சியுடன் இணக்கமாக செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக சொல்கிறார்கள். ஆனால் எதை காரணம் காட்டியும் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவையும் அதிமுகவில் நுழைய விடுவதற்கு அந்த கட்சியின் தலைமை தயாராக இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.ஆகவே மத்திய அரசு இணக்கமாக செல்வதற்கு வலியுறுத்தினாலும் அதனை அதிமுக தலைமை அலட்சியம் செய்து விட்டது. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை சசிகலா திடீரென்று தான் அரசியலில் இருந்து விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த டிடிவி தினகரன் அதிமுகவிற்கு எதிரான செயல்பாடுகளை இன்னும் துரிதப்படுத்த தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக தான் தற்சமயம் அவர் அமைந்திருக்கும் கூட்டணி இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். அதனால்தான் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த தேமுதிகவிற்கு வாக்கு சதவீதம் குறைவாக இருக்கிறது என்று தெரிந்தாலும் கூட சுமார் 40 தொகுதிகளை கொடுத்திருக்கின்றார்.இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் அதிமுக நிற்கும் இடங்களிலெல்லாம் தேமுதிக என்றால் நிச்சயமாக அதிமுகவிற்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்று அவர் நம்புவதாக தெரிவிக்கிறார்கள். அதோடு அதிமுகவிற்கு செல்லும் வாக்குகளை தடுப்பதற்கான முயற்சி தான் இந்த கூட்டணி என்றும் சொல்கிறார்கள்.

தென் தமிழகத்தை பொறுத்தவரையில் டிடிவிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதாக கருதுகிறார்கள். அதன் காரணமாக தான் அவர் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார் எனவும் தெரிவிக்கிறார்கள். ஆனால் வட தமிழகத்தை பொறுத்தவரையில் டிடிவிக்கு போதுமான அளவிற்கு செல்வாக்கு இல்லை காரணம் நீங்கள் எப்பொழுதும் அதிக செல்வாக்குடன் இருப்பது அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி ஆகவே அவர்களை எதிர்கொள்வதற்காக வடதமிழகத்தில் அதிக அளவில் தேமுதிகவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் முக்கியமாக பார்க்கப்படுவது விருதாச்சலம் சட்டசபைத் தொகுதி, அதேபோல ரிஷிவந்தியம் சட்டசபைத் தொகுதிகள் என்று இரு தொகுதிகளிலும் தேமுதிக தனி செல்வாக்குடன் திகழ்வதாக நினைக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க சுமார் இரண்டு சதவீத வாக்குகளை மட்டுமே கொண்ட ஒரு கட்சிக்கு 40 தொகுதிகளை கொடுத்திருப்பது டிடிவி தினகரனின் அதிமுகவை பழிவாங்கும் முயற்சியின் உச்சம் என்று சொல்கிறார்கள். அதிமுக நிற்கும் இடங்களில் எல்லாம் தேமுதிக நின்றால் அதிமுகவிற்கு நிச்சயமாக போதுமான அளவிற்கு வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லுகிறார்கள். வாக்குகளை சிதரடிப்பதற்க்காகவே அவர் இவ்வாறு ஒரு திட்டத்தை தீட்டி இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதேபோல இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருக்கின்ற சட்டசபை தொகுதிகளுக்கு தன்னுடைய கூட்டணி கட்சியாக இருந்த வரும் போது ஒவைசி போன்ற கட்சிகளுக்கு வாய்ப்பளித்து இருக்கிறார் டிடிவி தினகரன். இப்படி அதிமுகவை தோற்கடிப்பதற்காக முழுமூச்சாக இறங்கியிருக்கும் டிடிவி தினகரனின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து முதல்வர் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வாரா என்று தமிழகமே எதிர்பார்த்து வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்.