ஆண்களையே குறிவைத்து தாக்கும் கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்

Photo of author

By Parthipan K

உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நிலையில் பொருளாதாரமும் கடும் விழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவிய துவக்கத்தில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் கொரோனா இந்தியாவில் இருந்து பரவுகிறது என்று குற்றம் சாட்டியது. மேலும் இது இந்திய மக்களின் நோய் என்றும் பல்வேறு விதமான விமர்சனங்கள் அந்த நாட்டு பொறுப்பாளிகள் மூலம் வைக்கப்பட்டது.

இருப்பினும் நேபாளத்தில் நேற்று மட்டும் 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதை அடுத்து அந்த நாட்டில் தொற்று உள்ளோர் எண்ணிக்கை 9,561 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அந்த நாட்டில் ஆண்களையே கொரோனா அதிக அளவில் குறிவைத்து தாக்கி வருவது தற்பொழுது தெரிய வந்துள்ளது.

இந்த நாட்டில் மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 894 பேர் பெண்களாக இருக்க, 8,667 பேர் ஆண்களாக உள்ளனர் என்ற செய்தி அந்த நாட்டினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொரோனா நோய்த்தொற்றால் இதுவரை அந்த நாட்டில் 23 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.