கொரோனா – இரண்டாவது இடத்தில் தமிழ் நாடு

0
167

உலக கொரானா பாதிப்பில் முதல் பத்து இடங்களில் இந்தியா – இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு இரண்டாமிடம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பில் உலகநாடுகளின் மத்தியில் 9-வது இடத்தை பிடித்தது. இந்தியா.

கொரானா தொற்றால் இந்தியாவில் 24 மணிநேரத்தில் 175 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,65,799 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா நாடுகள் உள்ள நிலையில் இந்தியா முதல் பத்து இடங்களில் இடம்பெற்றதால் இந்திய மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலம் கொரானா பாதிப்பில் முதல் இடத்தை பிடித்துள்ளது.மேலும் பலி எண்ணிக்கையிலும் முதல் இடத்தை பிடித்திருக்கும் மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா தொற்றினால் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடிக்குமென்ற அபாயம் உருவாகிறது.இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று கலந்தாலோசிச்க உள்ளார்.

Previous articleகொரோனாவை வைத்து அரசியல் செய்யும் ட்ரம்ப்
Next articleகிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தி – ஆஸ்திரேலியா இந்தியா தொடர் அட்டவணை வெளியீடு