சினிமாவுக்கு சென்றாலும், பீச்சுக்கு சென்றாலும் பாப்கார்ன் பொழுதுபோக்குக்கு ஏற்ற தின்பண்டமாக இருக்கிறது. ஆனால் பாப்கார்ன் உற்பத்தியாளர்களுக்கோ அதிக ஜிஎஸ்டியால் தலைவலி தான் ஏற்படுகிறது.
மேலும் தற்பொழுது 3 வகையான பாப்கான்களுக்கு முறையே மூன்று விதமான ஜிஎஸ்டி வரிகளை விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைப் படி :-
திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் விற்கப்படும் பாக்கெட் செய்யப்படாத பாப்கான்களான சாலட் அண்ட் பெப்பர் பாப்கானுக்கு 5 % ஜி எஸ் டி வரியும், லேபிலிடப்பட்ட மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட பாப்கானுக்கு 12 % ஜி எஸ் டி வரியும், ஸ்வீட் கேரமல் பாப்கார்னுக்கு 18% ஜி எஸ் டி வரியும் விதிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, உணவுக்கான ஜிஎஸ்டி 5% சலுகை விகிதத்தில் விதிக்கப்பட்டாலும், எளிமையான பாப்கார்ன் பாக்கெட் 18% உயரடுக்கு வரி அடுக்குக்கு மாற்றப்பட்டுள்ளது, வரி அதிகாரிகள் இது ஒரு நிலையான தானியம் அல்ல என்று தீர்ப்பளித்தனர்.
சாப்பிடும் முன் சூடாக்க வேண்டிய சோளப் பொட்டலத்திற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்; ஆனால், சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கும் பாப்கார்ன் பையில் எண்ணெய் தடவி மசாலாப் பூசப்பட்டதால், 18 சதவீத வரி விதிக்கப்படும் என்று அட்வான்ஸ் ரூலிங்ஸ் (ஏஏஆர்) ஆணையம் தெரிவித்திருந்தது.
சூரத்தை தளமாகக் கொண்ட பஃப்டு பாப்கார்ன் உற்பத்தியாளரான ஜெய் ஜலராம் எண்டர்பிரைசஸ், ஏஏஆர் தயாரிப்பில் தானிய வகை சோளத்தைக் கொண்டிருப்பதால் 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று முறையிட்டது, ஆனால் ஏஏஆர் மேல்முறையீட்டை நிராகரித்து, பஃப்ட் பாப்கார்ன் மீது 18 சதவீத ஜிஎஸ்டியை விதித்த நிலையில், தற்பொழுது பாப்கான்களின் சுவை மற்றும் தரத்திற்கு ஏற்றவாறு ஜிஎஸ்டி வரிகளை பிரித்து வழங்கும் படி ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.