கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்!

Photo of author

By Hasini

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்!

Hasini

Councilors at the meeting sensational debate! That's it!

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்!

எதிர் கட்சிகள் என்றாலே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது லட்ச குற்றச்சாட்டை பா.ஜ.க முன் வைத்து வாக்கு வாதத்தில் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி சார்பில் ஒன்றிய குழு கூட்டம், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் பாஜக கவுன்சிலர் சண்முகம் பேசும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழல் புரிந்து வருவதாக  திமுக மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர் ஞானமுத்து திமுக ஆட்சியில் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தானியங்களை கொள்முதல் செய்யப்பட்டது எனவும், செய்யப்படுகிறது, எனவும் கூறினார். பாஜக கவுன்சிலரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் மத்தியிலுள்ள பா.ஜ.க அரசு காரணமாக பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் ஏழை நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக திமுக மற்றும்  பாஜக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் அனைவரையும் சமாதானப்படுத்தினார்.