தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!!

0
102

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!!

சிங்கப்பூரில் கடந்த நான்கு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றில் 2 பேர் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஆகும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகின்றது.

இந்த சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா நோய் கட்டுப்படுத்த ஒரு வழியாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தபோதிலும் அனைத்து நாடுகளிலும் தேவையான தடுப்பூசி கிடைப்பதில்லை. அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்தவரை வேக்சின்களை வேகப்படுத்தி தான் வருகின்றன. கொரோனா தொடக்கத்தில் இருந்தே தடுப்பூசிகளை மேற்கொண்டு வருவது சிங்கப்பூர் ஆகும்.

57 லட்சம் பேரைக் கொண்ட சிங்கப்பூர், ஏற்கனவே தனது மக்கள் தொகையில் 75% குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது. அதனை போல அங்கு குறைந்தது 50 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டிருக்கிறது. அங்கு பெரிய அளவில் கொரோனா பாதிப்பானது அதிகரிக்கவில்லை.

கடந்த 28 நாட்களில் சிங்கப்பூரில் ஆயிரத்து 1096 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவர்களில் 484 பேர் முழுவதுமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள். 30% ஒரு டோஸ் தடுப்பு எடுத்துக் கொண்டவர்கள் மற்றும் 25% உறுதி செய்திருக்கின்றது. ஏழு பேருக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. 6 பேர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள்.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டில் பைசர் மற்றும் மாடர்னா கொண்டு தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு டோஸ் தடுப்பூசி தீவிர பாதிப்புகளைக் குறைக்கவே செய்யும். ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் பாதிப்புகளை உயிரிழப்புகளும் ஏற்படாது என்று ஆய்வாளர்கள் விளக்கமளித்து இருக்கின்றனர்.

author avatar
Jayachithra