எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது!! சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

0
142
Counseling for MBBS Courses Completed!! Deadline for admission extended!!
Counseling for MBBS Courses Completed!! Deadline for admission extended!!

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது!! சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

நாடு முழுவதும் மருத்துவ பட்டிப்புகளை படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும்.

இந்த வகையில் படிப்புகளுக்கு 15 சதவீத இட ஒதிக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு சார்பில் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் 6226 எம்பிபிஎஸ் போன்ற இடங்களும் பல் மருத்தவ கல்லூரியில் 1767 இடங்களும் உள்ள நிலையில் நேற்று கலந்தாய்வு நடைபெற்றது. இதில் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் இந்த இடங்களுக்கு என்று எய்ம்ஸ் ,ஜிப்மர் ,நிகர்நிலைப் பல்கலைகழகம் ,மற்றும் மத்திய பல்கலைகழகம் போன்ற கல்லூரிகளில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு மத்திய சுகாதார துறை அவர்களின் தலைமையில் மருத்துவ கலந்தாய்வு குழு  நடைபெற்றது.இவை அனைத்தும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வு.

அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான கலந்தாய்வு ஜூலை 20 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 6 ம் தேதியான நேற்றுடன் நிறைவடைகிறது.

இந்த முதல் கட்ட கலந்தாய்வு சுற்று முடிவடைந்து உள்ள நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு சுற்று ஆகஸ்ட் 9 ம் தேதி நிறைவடைகின்றது.

அத்தனை அடுத்து மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் மீதமுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு செப்டம்பர் 21 ம் தேதிவரை சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்படுகின்றது.

Previous articleகவனம் மக்களே!! அடுத்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது!!
Next articleமுதல் புகைப்படத்தை அனுப்பிய  சந்திரயான் 3!! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!!